If U Want New Endhiran Stills And Story

Enter your email address:

Delivered by FeedBurner

Search via This..

Custom Search

December 18, 2008

கைமாறியது எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

கைமாறியது எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!
Enthiran! - Now Sun Picture Production

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படைப்பான எந்திரன்- தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது சன் டிவியின் சன் பிக்சர்ஸ்.

இது தொடர்பாக இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில்ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சந்திக்கின்றனர்.

எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் ரூ. 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பியது


இந் நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதிபூண்டுள்ளது.

சன் நிறுவனம் சமீபத்தில் தான் சன் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்படப் பிரிவைத் துவங்கியது. இந்த நிறுவனத்தின் முதல் படம் காதலில் விழுந்தேன் பிரமாண்ட வெற்றி பெற்றது. அடுத்த படம் தெனாவட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

விரைவில் சிவா மனசுல சக்தி, தீ, பூக்கடை ரவி போன்ற படங்கள் வெளி வர உள்ளன.

Sun Pictures produce Rajini’s ‘Enthiran’

Sun Pictures produce Rajini’s ‘Enthiran’
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் ‘எந்திரன்’

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் திரைப்படத்தை சன் குழுமத்தின் ஓர் அங்கமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்க ஷங்கர் இயக்கும் திரைப்படம் எந்திரன். இந்தத் திரைப்படத்தை முதலில் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது. பிறகு ஏனோ பின்வாங்கிவிட்டது. ஆனால் எந்திரன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தை தயாரிப்பதாக சன் பிக்சர்ஸ் புதன்கிழமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ரஜினி கலாநிதி மாறனை, இயக்குநர் ஷங்கர் சகிதம் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து ரஜினி கூறுகையில்,

”சன் டிவி நிறுவனம் தான் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்று இரண்டுவருடங்களாகவே கேட்டுவந்தது. நானும் நேரம் வரும்போது செய்யலாம் என்று கூறிவந்தேன். இப்போது நேரம் வந்துவிட்டது. அதிலும் எந்திரன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

சன் பிக்சர்ஸ் சார்பில் கூறுமபோது ”எந்திரன் இந்திய எல்லலைகளைத் தாண்டி உலக அளவில் மிகப் பிரமாண்டமான வெற்றிப் படமாக அமையும்” என தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மற்ற நிறுவனங்கள்தயாரித்த திரைப்படங்களை (காதலில் விழுந்தேன், தெனாவட்டு) வெளியிட்டுவந்த சன் பிக்சர்ஸ் தயாரிக்ககும் முதல் திரைப்படம் எந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன் -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன் -

கலாநிதி மாறனுடன் ரஜினி சந்திப்புவியாழக்கிழமை,மேலும் புதிய படங்கள் சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பாக சன் குழும நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனை அவரது இல்லத்திற்குச் சென்று ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கேமராமேன் ரத்னவேலு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிப்பில் இருந்து வரும் படம் எந்திரன். இப்படத்தை தற்போது சன் டிவி குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதி பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறுகையில், இந்தியாவின் மிகப் பெரிய மீடியா நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கம்தான் சன் பிக்சர்ஸ். பெரும் பொருட்செலவில் உருவாகும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம், நட்சத்திரங்கள் என அனைத்து வகையிலும் இந்தப் படம் மிகப் பெரிய படமாக உருவாகும். அடுத்த ஆண்டு இறுதியில், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகும்.




வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்றவுள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபக்ட்ஸ்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இதுவரை இந்தியத் திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்றார் சக்ஸேனா.

எந்திரன் படம் குறித்து கலாநிதி மாறன் கூறுகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இது மிகப் பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன்.

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப் பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும் என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகையில், இது இந்தியாவின் மிகப் பெரும் படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். படம் சிறப்பாக வரும் என்றார்.

ஷங்கர் கூறுகையில், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்த்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டிவியுடன் சேரும்போது பலத்த எதிர்பார்ப்புடன், விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும் என்றார்
.

மழை.. எந்திரன் செட் நாசம்!

மழை.. எந்திரன் செட் நாசம்!
மேலும் புதிய படங்கள்சென்னை வட பழனியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட்கள், கன மழை காரணமாக சேதமடைந்தன. இதனால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

ஷங்கர் இயக்க, ரஜினி, ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கு் பிரமாண்டப் படம் எந்திரன். இப்படத்தின் ஷூட்டிங் ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது.

கேரளாவில் மணிரத்தினம் பட ஷூட்டிங்குக்காக ஐஸ்வர்யா ராய் போய் விட்டதால், ரஜினி மட்டும் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது ஷங்கர் படமாக்கி வருகிறார். சென்னையில் இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் திருவான்மியூர் உடற்பயிற்சிக் கூடத்தில் ரஜினி எக்சர்சைஸ் செய்வது போலவும், தண்டையார்பேட்டையில் ரஜினி விஞ்ஞான கெட்டப்பில் நடப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன

இதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரஜினி ஆடம்பரமான பென்ஸ் காரில் பயணிப்பது போலவும் ஒரு காட்சி படமானது. இதற்காக. ரூ. 85 லட்சம் செலவில் காரை வாங்கியுள்ளனராம்.

இந்த நிலையில் வடபழனியில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்கள், கன மழை காரணமாக சேதமடைந்துள்ளது.

இங்கு பல முக்கிய காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை வந்து கெடுத்து விட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. ரத்தாகி விட்டது.

அடுத்து ஐஸ்வர்யா ராய் வரவிருக்கிறார். இதையடுத்து அவரும், ரஜினி சம்பந்தப்பட்ட பிற காட்சிகளு் படமாக்கப்படவுள்ளன. இதற்காக டிசம்பர் 15ம் தேதிக்குப் பின்னர் குலு மனாலிக்கு ஷங்கர் அன் கோ பயணமாகவுள்ளது.

திட்டமிட்டபடி எந்திரன் 3-வது கட்ட படப்பிடிப்பு!

திட்டமிட்டபடி எந்திரன் 3-வது கட்ட படப்பிடிப்பு!
எந்திரன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி குல்லு – மணாலியில் அடுத்த சில தினங்களில் தொடங்குகிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

உண்மை நிலவரம் என்ன?

: இதற்குப் பெயர்தான் ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’!

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டியைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

அதனால் ஒரு மாறுதலுக்காக, இதோ ஐஸ்வர்யாவின் புத்தம் புது படம், அதுவும் நம்ம ஸ்டைலிஷ் எந்திரனுடன் கோவாவில் காதல் மொழி பேசும் காட்சி!

மக்களின் நாடித் துடிப்பை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் ரஜினி. இந்தக் கதைக்கு இப்படித்தான் வரவேற்பிருக்கும் என்பதை தெளிவாக முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
சந்திரமுகி, குசேலன் ஆடியோ வெளியீட்டு விழாக்களை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தனது படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அதன் வீடியோ பதிவு கூட நமது தளத்தில் உள்ளது. இதோ அதன் சுருக்கம்:

‘என்னடா இந்தாளு எப்பப் பார்த்தாலும் ஐஸ்வர்யா ராய் நாயகியா வேணும்னு கேக்கிறானேன்னு சிலர் நினைக்கலாம்.

படையப்பாவில் நீலாம்பரியா, சந்திரமுகியில் நாட்டியக்காரி சந்திரமுகியா… ஐஸ்வர்யாவை கற்பனைப் பண்ணிப் பாருங்க. அதுக்காகத்தான் அவங்க வேணும்னு கேட்டேன்…’, என்று பேசியிருந்தார்.

எந்திரனில் இப்போது ஐஸ்வர்யா ராயைத் தவிர இன்னொரு நாயகியை ரஜினிக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?

இதுக்குப் பெயர்தான் திரை ரசாயனமோ… (அதாங்க ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி!)

Tags: Aishwarya Rai, Enthiran - The Robot, Rajini

எந்திரன் Exclusive: கோவா படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார்!
October 6, 2008 · Filed Under Eanthiran - The Robot, Rajini, எந்திரன், ரஜினி · 8 Comments
சக நடிகர்கள் தொடங்கி சாதாரண ரசிகன் வரை அனைவரையும் கட்டிப் போடும் அற்புத சக்தி மிக்கவை ரஜினியின் கண்கள்.

மிகச் சிறந்த தவசீலர்களுக்கும் யோகிகளுக்கும் மட்டுமே அமையப்பெற்ற வசீகரமும் இறைத் தோற்றமும் நமது ரஜினியின் கண்களுக்கு மட்டுமே உண்டு.

முதன் முதலில் அவரது கண்களின் தீட்சண்யம் கண்டு நான் மிரண்டு போனது ஜானி படத்தில், துரோகியாய் மாறும் காதலி தீபாவாவைக் கொன்றுவிட்டு ஒரு வெறித் தோற்றம் காட்டுவாரே அந்த காட்சியில்.

சந்திரமுகி வேட்டைய ராஜாவின் கண்களைப் பார்த்தபோது மீண்டும் அதே உணர்வை அடைந்தேன். அந்த பார்வையின் சக்திக்கு நிகரான வசனங்களை எவ்வளவு பெரிய இயக்குநராலும் எழுத முடியாது, அதற்கு நிகரான உணர்வுகளை எவ்வளவு சிறந்த நடிகராலும் காட்ட முடியாது. காரணம் அந்தக் கண்களில் தெரிவது வெறும் நடிப்பல்ல… ஒரு நல்ல மனிதரின் மனம். நல்லவரின் பார்வையை எதிர்த்து எவராலும் சில விநாடிகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.

பாபாவில் ரஜினி இப்படிச் சொல்வார்: “ஐயா… யாராவது பேசும்போது நான் அவங்க முகத்தைப் பார்க்க மாட்டேன். கண்களைத்தான் பார்ப்பேன். பொய் சொல்றவங்களை அவங்க பார்வையிலேயே கண்டுபிடிச்சிடுவேன்!”


-இந்த மாதிரி ஒரு மனிதரின் பார்வைக்கு எதிரே எவர் நிற்க முடியும்! அதனால்தான் அவர் முதுகுக்குப் பின் தூற்றுவோரும்கூட முகத்துக்கு நேரே வந்தவுடன் வாழ்த்திப் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்!

இங்கே எந்திரன் – தி ரோபோ படப்பிடிப்புக்காக கோவாவில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, படப்பிடிப்பு இடைவேளையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை, சூப்பர் ஸ்டாரின் அதி தீவிர ரசிகர் ஒருவர் கோவாவில் காத்திருந்து படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.

நண்பர்களே… உலகில் நீங்கள் எத்தனையோ சிறந்த நடிகர்களைத் திரையில் பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள்.

இந்தப் படங்களை ஒரு முறை பாருங்கள். இந்த சூரியப் பார்வைக்கு நிகராகுமா மற்ற நட்சத்திரங்களின் மினுக்கல்கள்!


Tags: Enthiran - The Robot, Goa, Rajini, Shooting, எந்திரன், ரஜினி

எந்திரன் : EXCLUSIVE…!!
September 28, 2008 · Filed Under Eanthiran - The Robot, Rajini, எந்திரன் · Comment

சீரியஸிலிருந்து ஜில் சினிமாவுக்கு வருவோம்…

இதுவரை கமர்ஷியல் தளங்களில் எதிலும் வராத எக்ஸ்க்ளூசிவ் எந்திரன் படங்கள் இதோ…

இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோவின் அட்டகாசமான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்கள்.
உடனே ஒட்டு வேலைோ என சந்தேகப்பட வேண்டாம்.

படங்கள் நிஜமானவைதான் என இவற்றை அனுப்பி வைத்தவர்கள் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

பெருநாட்டின் மாச்சு பிக்கு பின்னணியில் இளமை ததும்பும் ரஜினியும், அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆடிப் பாடும் முதல் டூயட்டின் இரு காட்சிப் பதிவுகள்.


திரை வடிவத்தை நினைத்தாலே… ஜிவ்வென்று மனம் பறக்கிறதல்லவா…

இவை அதிகாரப்பூர்வமான ஸ்டில்களா… படத்தில் இடம்பெறுமா என்பதையெல்லாம் ஷங்கர் வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் இந்தப் படத்தின் ரஜினியின் ஹேர் ஸ்டைல், அவரது உடைகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் இந்த ஸ்டில்கள்!


Tags: Aishwarya Rai, Eanthiran - The Robot, Peru, Rajini, Shooting, எந்திரன் - தி ரோபோ, ஐஸ்வர்யா, பெரு, ரஜினி

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!
September 28, 2008 · Filed Under America, Eanthiran - The Robot, Rajini, எந்திரன் · Comment

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8-ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5-க்குள் முடிவடைகிறது.

அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.

ஆறு பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.

முதல் டூயட் பாடலை தென் அமெரிக் காவில் உள்ள பெரு நாட்டின் புகழ் பெற்ற வரலாற்று நினை விடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.

மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.


Tags: Aishwarya Rai, Eanthiran - Rabot, Rajini, எந்திரன், ரஜினி, ஹவாய்

எந்திரன் - அப்டேட்!
September 28, 2008 · Filed Under Analysis, News, Politics, Rajini, அரசியல், எந்திரன், ரஜினி · Comment
ஒரு சுறு சுறு, சூடான எச்சரிக்கைப் பதிவுக்கு முன்… இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோ பற்றிய ஒரு ஜில் செய்தி.எத்தனை முறை படித்தாலும், என்னதான் கதையாகவே இருந்தாலும் ரஜினி பற்றிய செய்திகளுக்கு இருக்கும் மவுசு தனி. இதை ரஜினி ரசிகர்களை விட நன்கு உணர்ந்திருப்பவர்கள் பத்திரிகைகளும், இதர செய்தி ஊடகங்களும்தான்…

நன்றி- தட்ஸ்தமிழ்


மாச்சு பிக்குவில் ரஜினி – ஐஸ் டூயட்!

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிக்குவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆடிப்பாடும் டூயட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற இடம் மாச்சு பிக்கு (Machu Picchu). ஐநாவின் யுனெஸ்கோவால் எட்டாவது உலக அதிசயமாக சிறப்பு அங்கீகாரம் தரப்பட்டுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் இது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள முதல் படமும் எந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போன் காமிராக்களில் படமெடுத்து சிவாஜி பட ரகசியங்களை சிலர் வெளியிட்டதால், மீண்டும் அப்படியொரு தவறு நடக்கக் கூடாது என்பதில் ஷங்கர் கவனமாக உள்ளார். அதனால்தான் பத்திரிகை செய்திக் குறிப்பில் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்துவதாகக் கூறிவிட்டு, இப்போது பிரேசில், பெரு மற்றும் சிலி நாடுகளில் நடத்தி வருகிறார்.

முதல் பாடல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாம். இரண்டாவது பாடலை ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது எந்திரன் (ரோபோ) ரஜினி பிரமாண்ட அரங்கங்களின் பின்னணியில் பாடும் அறிமுகப் பாடல் என்பதால் மிகுந்த கவனத்துடன் வடிவைத்துள்ளாராம் ஷங்கர். ராகவா லாரன்ஸ்தான் இதற்கு நடனம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.சிவாஜியில் பட்டையைக் கிளப்பிய அதிரடி… பாடலுக்கு இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.

அமேசான் நதி மற்றும் மழைக் காடுகளிலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ள இந்த சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் பாடும் டூயட் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுப் பாடலையும் இங்கு படமாக்கவில்லை ஷங்கர். இதன் இன்னொரு பகுதியை அமேசான் நதிப் படுகையிலும், பிரேஸில் நாட்டில் உள்ள அமேசான் காட்டின் இன்னொரு பகுதியிலும் எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தில் ரஜினிக்கு இரண்டு ஓப்பனிங் பாடல்கள். அதே போல ரஜினிதான் படத்தின் வில்லன் கம் ஹீரோ.
முழுக் கதையும் படித்துவிடத் துடிப்பவர்கள் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ படிங்க!!


Tags: Eanthiran - The Robot, Rajini, அரசியல், ரஜினி

என் இனிய இயந்திரா!
September 28, 2008 · Filed Under Cinema, Media, New Film, News, Rajini, Sujatha, எந்திரன், ரஜினி · Comment

எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டார் யாரென்றால், சந்தேகமில்லாமல் அமரர் சுஜாதாதான் என்றே அனைவரும் சொல்வார்கள். அதிகமாகக் கதை எழுதியதால் கிடைத்ததல்ல இந்தப் பட்டம். நடிப்புலக சூப்பர் ஸ்டாரான ரஜினி போலவே, மிகச் சிறந்த மனிதராக அவர் வாழ்ந்ததுதான். வெறும் தொழில் திறமை மட்டுமே யாரையும் உச்சத்துக்குக் கொண்டு வருவதில்லை.

நட்சத்திர எழுத்தாளராக மாறிய பின் சுஜாதா எழுதிய மிகச் சிறந்த விஞ்ஞான – அரசியல் நாவல் என் இனிய இயந்திரா. அநேகமாக தமிழில் எழுதப்பட்ட முதல் விஞ்ஞான நாவல்.

தொடர்கதையாக ஒரு ஆண்டுக்கும் மேல் விகடனில் வெளிவந்த இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவரையும் திகைக்க வைத்துவிட்டது.

அதன் பலன், ஊரிலிருக்கிற சிறிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் ரோபோ கதைகள் என்ற பெயரில் ஏகப்பட்ட கதைகளை எழுதிக் குவித்தனர். மாதாமாதம் பாக்கெட் நாவல்களாக வெளிவந்து ரோபோவை மலிவாக்கத் தொடங்கின.

தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புரட்சிகளுக்கு முன்னோடி சுஜாதாதான் என்பதால் இதுவும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.

மிகுந்த விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த கதையை சட்டென்று ஒரு கட்டத்தில் நிறுத்தினார் சுஜாதா, அதன் இரண்டாம் பாகத்தை ஒரு இடைவெளிக்குப் பிறகு தொடங்குவதாக உத்தேசம் என்ற அறிவிப்புடன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் வேறு ஒரு ஸ்டைலில் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார், மீண்டும் ஜீனோ எனும் பெயரில்.

இந்த இரு கதைகளுமே பலருக்கும் நன்கு பரிச்சயமானவைதான். ஆனால் புத்தக வடிவில் படிக்கும் ஆர்வம் குறைந்த ஒரு தலைமுறையுடன்தான் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே ஆன்லைனில் அந்தக் கதையையோ அதன் சுருக்கத்தையோ சொல்லி, எந்திரன் – தி ரோபோ படத்தின் எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் குறைக்க விருப்பமில்லை.

ரோபோக்கள் ஆளும் ஒரு யுகத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள், மாற்றங்களை தனக்கே உரிய அங்கத – விஞ்ஞானம் கலந்த நடையில் சுஜாதா எழுதியிருக்கும் அழகே தனி.
தமிழில் கண்ணதாசனுக்குப் பிறகு, அத்தனை வலிமையான புதுமையான நடைக்குச் சொந்தக்காரர் சுஜாதா மட்டுமே.

அதுமட்டுமல்ல… தமிழ் இலக்கிய உலகில் தொடர்கதைகள் துவங்கும் முன் பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது மூன்று தருணங்களில்தான். அவை மூன்றுமே சுஜாதாவின் தொடருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கட்அவுட், பேனர் என அமர்க்களத்துடன் துவங்கிய கதை இது (இதற்கும் முன் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் நாவல்களுக்கும் கட் அவுட் வைத்தனர்).

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நட்சத்திரக் கதை எழுதப்பட்டதே நமது உச்ச நட்சத்திரத்துக்குத்தான் போலும்!

ரஜினியின் இமேஜ் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு சிவாஜி எனும் பிரமாண்ட பொழுது போக்குப் படத்தைத் தந்த ஷங்கரும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒருமாத காலம் உட்கார்ந்து ரஜினிக்காகவே இந்த இரு நாவல்களையும் ஒரு திரைக்கதையாக்கினார்கள். கிட்டத்தட்ட வசனங்கள் முழுமை பெறும் தருவாயில்தான் சுஜாதா நம்மை விட்டுப் பிரிந்தார்.

சுஜாதா உருவாக்கிய என் இனிய இயந்திரா திரைக்கதை இன்னும் சற்று செம்மைப்படுத்தப்பட்டு ஹாலிவுட் தரத்துடன், எந்திரனாக வருகிறது.
அதேபோல, எந்திரன் என்ற இந்த தலைப்பை வைத்ததும் மறைந்த சுஜாதாதான். சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா மேடையிலேயே இதை அவர் ஒரு யோசனையாக அறிவித்து நினைவிருக்கலாம்.
சுஜாதாவை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த ஷங்கர், அவருக்கு செலுத்தும் மரியாதையாக ரஜினியின் ஒப்புதலுடன் வைத்திருக்கும் தலைப்பு இது.
தமிழக அரசும் இந்தத் தலைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

அனைவர் மனதுக்கும் இனிய எந்திரனாக அமையட்டும் இந்தப் படம்!


Tags: Eanthiran - The Robot, Rajini, Shankar, Sujatha, எந்திரன், சுஜாதா, ரஜினி

ரஜினி - ஒன் மேன் இண்டஸ்ட்ரி!
September 28, 2008 · Filed Under Eanthiran - The Robot, New Film, News, Rajini, எந்திரன், ரஜினி · Comment

ரஜினி என்பவர் ஒரு தனிப்பட்ட நடிகர் இல்லை. அவரைச் சுற்றித்தான் இந்த திரையுலகமே இயங்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், ஒரு சின்ன அறிவிப்பு மூலம்!

எந்திரன் – தி ரோபோ என்ற பெயரில் ஒரேயொரு அறிவிப்புதான் வெளிவந்திருக்கிறது இதுவரை. அதற்குள் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு புத்துணர்ச்சியோடு நிமிர்ந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது.

திட்டிய வாய்களெல்லாம் மீண்டும் ரஜினி புகழ்பாட தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதை நமுட்டுச்சிரிப்போடு வேடிக்கை பார்க்கத் தயாராகி விட்டனர் ரஜினி ரசிகர்கள்.

அய்ங்கரன் – ஈராஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றன. ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் சர்வதேச பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. அறிவிப்பு வெளியான கையோடு அதன் பங்கு மதிப்பு 2.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ஐங்கரன் நிறுவனத்துக்கு வாழ்த்துக்களும் வர்த்தக விசாரிப்புகளுமாக போன் கால்கள் வந்த வண்ணமுள்ளன.

ஆனால் குசேலனில் நடந்த எந்த தவறும் இந்தப் படத்தில் நடக்காமல் கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றனர் அய்ங்கரன் நிறுவனத்தினர்.

இந்தப் படம் வழக்கமான விநியோக முறையில் தரப்படாது என்றே தெரிகிறது. அய்ங்கரன் இந்தப் படத்தை உலகம் முழுக்க தானே வெளியிடப் போகிறது. அதுமட்டுமல்ல, இது வரை தமிழ்ப் படங்களே வெளியாக பல நாடுகளிலும் கால்பதிக்கப் போகிறது ரஜினியின் எந்திரன் - தி ரோபோ.

இதுகுறித்து அய்ங்கரன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன் இப்படிக் கூறுகிறார்:

“நீங்கள் சொல்வது சரிதான். ரஜினி தனி மனிதர் அல்லது தனிப்பட்ட நடிகர் கிடையாது. அவர் ஒன்மேன் இண்டஸ்ட்ரி… அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரோபோ இந்திய சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லக் கூடாது. அவரது தீவிர ரசிகர்களில் ஒருவனாக பல ஆண்டுகள் அவரை ரசித்தவன், அவரது படங்களை விநியோகித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ரஜினிக்கு ஈடு இணை கிடையாது…!”


Tags: Eanthiran - The Robot, Rajini, Shooting

எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
September 28, 2008 · Filed Under Cinema, Eanthiran - The Robot, Media, New Film, News, Rajini, எந்திரன், ரஜினி · Comment

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் முதல் ஸ்டில் சுவரொட்டிகள் வடிவில் வெளியாகயுள்ளது.

இந்த ஸ்டில்தான் நாளை பப்ளிசிட்டி டிசைனாகவும் செய்தித் தாள்களுக்குத் தரப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை பத்திரிகைகளுக்கு எந்த ஸ்டில்லும் அதிகாரப்பூர்வமாகத் தரப்படவில்லை.

இன்னும் ஒரு மாதத்துக்கல்ல… ஒரு வருடம் வரைகூட மீடியா காலத்தை ஓட்டிவிடும் இந்த ஒரு ஸ்டில் மற்றும் அதற்கான பின்னணிக் கதையை பின்னி எடுப்பதில்.

இதைத் தவிர மேலும் இரண்டு வித்தியாசமான, மிரட்டல் ஸ்டில்களும் உண்டாம். அவை விரைவில் வெளிவரக் கூடும்.

அதேநேரம் படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேட்டட் டிசைன்களை மட்டுமே தரப்போகிறார்களாம்.

அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்து.

இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கூறினாராம்.

அதுதான் ரஜினி!


Tags: Enthiran - The Robot, First Look, Rajini, எந்திரன், ரஜினி

ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்!
September 28, 2008 · Filed Under Eanthiran - The Robot, Machu Picchu, New Film, News, Rajini, Super Star, Tamil, எந்திரன், ரஜினி · Comment

தன்னைப் பார்த்து குரைப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், உலக அளவில் ஒரு பிரமாண்டப் படத்தை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இயந்திரன் - தி ரோபோ என தமிழ்ப் படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கும் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும், இதன் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களை ரோபோ எனும் பெயரிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர். ஷாரூக்கான் 9 தலைப்புகளைப் பதிவு செய்திருந்தாலும், அவை ஷங்கர் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவை என்றே கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கமும் தி ரோபோ எனும் பெயரிலேயே ரிலீசாகப் போகிறதாம்.

இனி படம் குறித்து ஷங்கர் அதிகாரப்பூர்வமாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:

இயந்திரன் – தி ரோபோ: இந்தியாவின் முதல் சர்வதேசப் படம்!

முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயந்திரன் – தி ரோபோ (நேற்று எந்திரம் என்று குறிப்பிட்டிருந்தோம். அது இயந்திரன் என மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் ஷங்கரின் மீடியா மேனேஜர் நிகில்!) படத்துக்காக.
இந்தப் படத்தில் பணியாற்றுபவர்களில் பாதிக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.

இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போகிறவர்கள் ஹாவலிவுட்டின் நெம்பர் ஒன் ஸ்டுடியோ எனப்படும் ஸ்டான் வின்ஸ்டன். இவர்கள்தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர் -2, ஜூராஸிக் பார்க், பிரடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள். இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேப் இஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்டு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

‘நிச்சயம் இந்தப் படம்தான் இந்திய சினிமாவின் சர்வதேச முகவரியாக இருக்கப் போகிறது. டெர்மினேட்டரை விட பல மடங்கு மிரட்டலான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் உலகம் முழுக்க வெளியாகப் போகிறது இயந்திரன்’ –என்கிறார் அவர்.

இனி ரஜினி டார்கெட், உலக மார்க்கெட்!

இந்த பிரமாண்டங்களுப் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி படங்களின் வீச்சை இந்திய திரை உலகை விட ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தின் மார்க்கெட் உலகளாவியதாக இருக்கும். அப்போது தமிழ்நாடு, ஆந்திரா என்று மாநிலம் தழுவிய விற்பனை உரிமை ஒரு பொருட்டாகவே இருக்காது.

தேவையில்லாமல் சிறு விஷயங்களையும் ஊதிப் பெரிதாக்கும் போக்கும் நின்று போகும். எனவேதான் ரஜினி இத்தனை பிரமாண்டங்ககளையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கவிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திட்டமும் ரஜினிக்கு உள்ளது. அதற்கான வெள்ளோட்டம்தான் இயந்திரன், என்கிறார்கள்.

எப்படியோ, ரஜினியின் படம் ஒன்று முழுக்க முழுக்க ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையாகத் தயாராவது ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வியாபார எல்லைகளையே விரிவடையச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

ரியலி கிரேட்!

எந்திரன் : சங்கரின் புது யோசனை

எந்திரன் : சங்கரின் புது யோசனை

சிவாஜி படத்தின் ஸ்டில்களைப் போலவே எந்திரனின் ஸ்டில்களும் வெளிவந்து விட்டதில் ஷங்கர் அப்செட். என்ன செய்யலாம் என தீவிரமாய் யோசித்தவர் புதிய ஜாமர் கருவிய வாங்கி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பொறுத்தப் போகிறாராம். அப்படிப் பொறுத்தும் பட்சத்தில் செல்போன்கள் சுத்தமாக செயலிழந்து போகும், பிறகு ஸ்டில்கள சுட்டுவிடுவார்களோ என்ற டென்சனில்லாமல் வேலை செய்யலாம் என்பது ஷங்கரின் கணக்கு. எந்திரன் படப்பிடிப்பை ஒத்தி வச்சிருக்கீங்களாமே...

ரகசியத்த உடைங்க சீக்ரெட் டைரக்டர்!

கோவாவில் எந்திரன்!

கோவாவில் எந்திரன்!

எந்திரன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கிறது. ர‌ஜினியுடன் கலாபவன் மணி, வி.எம்.சி. ஹனிஃபா உள்ளிட்டோர் இந்த‌ப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.

பெருவில் படப்பிடிப்பு நடந்த போது கட்டுக்காவலை மீறி படப்பிடிப்பு ஸடில்கள் பத்தி‌ரிகையில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து மூன்று உதவியாளர்களை படத்திலிருந்தே நீக்கினார் ஷங்கர்.

கோவா உள்ளுர். இங்கு எப்படி படங்கள் லீக் ஆகாமல் தடுக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெ‌ரிய கேள்வி.

ரசிகர்களின் தள்ளு முள்ளுவை சமாளிக்க தனியார் பாதுகாப்பு படையின் உதவி கோரப்பட்டுள்ளதாம்.

காமெடிக்கு முக்கியத்துவம் தரும் 'எந்திரன்'

காமெடிக்கு முக்கியத்துவம் தரும் 'எந்திரன்'
ரஜினி படங்கள் என்றாலே எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. 'சந்திரமுகி' படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ரஜினி அடித்த லூட்டி, அனைத்து தரப்பினரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது.

ரஜினியின் காமெடியை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருப்பதை அறிந்துள்ள இயக்குனர், ரஜினியின் தற்போதைய 'எந்திரன்' படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.

'எந்திரன்' படத்தில் காமெடி ஏ‌ரியாவை கலக்க இருப்பது சிரிப்பு நடிகர்கள் கருணாஸ், சந்தானம் ஆகியோர் தான். 'பாபா'வில் நடித்த கருணாஸ், அதன் பிறகு இப்போது தான் 'எந்திரனி'ல்தான் ர‌ஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

ஏற்கனவே 'குசேலன்' படத்தில் ரஜினியுடன் நடித்த சந்தானம், எந்திரனிலும் அவருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியது !!

எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியது !!

எந்திரன் படம் ஐங்கரன் இன்டர்நேஷனல் அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இருந்தது, தற்போது உலகளவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலில் இருந்த அவர்களிடம் இருந்து பெரும் தொகைக்கு இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளது.


சன் பிக்சர்ஸ் விநியோக உரிமை பெற்று இது வரை காதலில் விழுந்தேன், தெனாவெட்டு படங்களை வெளியிட்டுள்ளது மற்றும் பல படங்களை வெளியிட உள்ளது.


தற்போது முதல் முறையாக அதிக பொருட்செலவில் எந்திரன் படத்தை தயாரிக்கப்போகிறது. இதை கலாநிதி மாறன், ரஜினி, ஷங்கர் ஆகியோர் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.


குசேலன் படம் வெளி வந்த போது ரஜினியை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டு இருந்தது சன் டிவி. போன மாத ரஜினிகாந்த், தற்போது சன் செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி விட்டார் :-). இனி படம் வெளிவரும் வரை ரஜினியை பற்றி எந்த செய்தியும் தவறாக போட மாட்டார்கள். அப்படி போட்டால் அது அவர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மிக சிறந்த!! வியாபாரிகளான சன் குழுமம் இதை அறியாமலா இருப்பார்கள்!


காதலில் விழுந்தேன் படத்திற்கே உலக பட ரேஞ்சிற்கு விளம்பரம் செய்தார்கள், எந்திரன் படத்திற்கு .... நினைத்தாலே கண்ணை கட்டுதே!

Free Subscribetion

Click This More Get....