எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியது !!
எந்திரன் படம் ஐங்கரன் இன்டர்நேஷனல் அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இருந்தது, தற்போது உலகளவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலில் இருந்த அவர்களிடம் இருந்து பெரும் தொகைக்கு இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளது.
சன் பிக்சர்ஸ் விநியோக உரிமை பெற்று இது வரை காதலில் விழுந்தேன், தெனாவெட்டு படங்களை வெளியிட்டுள்ளது மற்றும் பல படங்களை வெளியிட உள்ளது.
தற்போது முதல் முறையாக அதிக பொருட்செலவில் எந்திரன் படத்தை தயாரிக்கப்போகிறது. இதை கலாநிதி மாறன், ரஜினி, ஷங்கர் ஆகியோர் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
குசேலன் படம் வெளி வந்த போது ரஜினியை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டு இருந்தது சன் டிவி. போன மாத ரஜினிகாந்த், தற்போது சன் செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி விட்டார் :-). இனி படம் வெளிவரும் வரை ரஜினியை பற்றி எந்த செய்தியும் தவறாக போட மாட்டார்கள். அப்படி போட்டால் அது அவர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மிக சிறந்த!! வியாபாரிகளான சன் குழுமம் இதை அறியாமலா இருப்பார்கள்!
காதலில் விழுந்தேன் படத்திற்கே உலக பட ரேஞ்சிற்கு விளம்பரம் செய்தார்கள், எந்திரன் படத்திற்கு .... நினைத்தாலே கண்ணை கட்டுதே!
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?
-
revious · Next
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ்
(சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான்
...
12 years ago
No comments:
Post a Comment